follow the truth

follow the truth

September, 22, 2024
Homeஉள்நாடுகொழும்பு வாகன நெரிசலை குறைக்க போக்குவரத்துத் திட்டம்

கொழும்பு வாகன நெரிசலை குறைக்க போக்குவரத்துத் திட்டம்

Published on

கொழும்பு நகரில் வாகன நெரிசலை குறைக்க, நிரந்தர போக்குவரத்துத் திட்டமொன்றை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பயணத் தடைகள் நீக்கப்பட்டதன் பின்னர், கொழும்பு போன்ற புறநகர்ப் பகுதிகளில் ஏற்படக்கூடிய, போக்குவரத்து வாகன நெரிசலை தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை பொலிஸ், விமானப்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

எனவே, கொழும்பு போன்ற புறநகர் பகுதிகளில் ட்ரோன் கெமராக்களைப் பயன்படுத்தி அடுத்த வாரத்திற்குள், விசேட ஆய்வொன்று நடத்தப்படும். அந்த ஆய்வின் பின்னர் , எதிர்காலத்தில் கொழும்பு நகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கான நிரந்தர போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்துவதே ட்ரோன் கெமராக்கள் பயன்பாட்டின் நோக்கமாகும்.

மக்கள் சிரமமின்றி நகருக்குள் பிரவேசிப்பதற்கும், வெளியேறுவதற்குமான வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தல் போன்ற அனைத்து வசதிகளும் இதில் அடங்கும். அதன்படி, இந்த ட்ரோன் கெமரா திட்டத்தை நாம் எதிர்காலத்தில நடைமுறைப்படுத்துவோம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊரடங்கு சட்டம் 12 மணிக்கு தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (22) மதியம் 12 மணிக்கு தளர்த்தப்படும் என...

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...

ஊரடங்கு உத்தரவு அனுமதி குறித்து பொலிசாரின் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம்...