ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 தர 4 ஆண்களுக்கான தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.
குறித்த தூரத்தை ஓடி முடிக்க இலங்கை அணியினர் 3.02.55 நிமிடங்களை எடுத்துக்கொண்டனர்.
இதேவேளை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 400 மீற்றர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் இலங்கை மகளிர் அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.
இன்றைய தினம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கம் வென்றமையும் குறிப்பிடத்தக்கது.