அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவியிலிருந்து குடியரசு கட்சியைச் சேர்ந்த கெவின் மெக்கார்த்தி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதிநிதிகள் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 216 பேரில் 210 அவரை பதவி நீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
அமெரிக்க வரலாற்றில் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் ஒருவர் வாக்கெடுப்பின் ஊடாக நீக்கப்பட்டமை இதுவே முதன்முறையாகும்.
எதிர்கட்சியினரால் கொண்டு வரப்பட்ட யோசனைக்கு அமைய அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியுதவி வழங்கும் உடன்பாட்டை எட்டத் தவறினால் அமெரிக்க அரசாங்கம் முடங்கிப் போகும் அபாயம் கடந்த சனிக்கிழமை ஏற்பட்டிருந்த நிலையில் அந்த நிலையில் இருந்து நாட்டை மீட்டதும் கெவின் மெக்கார்த்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.