follow the truth

follow the truth

March, 28, 2025
HomeTOP1அதிகூடிய ஏற்றுமதி வருமானம் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் பதிவு

அதிகூடிய ஏற்றுமதி வருமானம் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் பதிவு

Published on

2023 ஆம் ஆண்டில் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகூடிய ஏற்றுமதி வருமானம் கடந்த ஓகஸ்ட் மாதத்திலேயே பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி 1,119 மில்லியன் டொலர்களாக ஏற்றுமதி வருமானம் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

ஆனால் இது கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் ஈட்டிய ஏற்றுமதி வருமானத்துடன் ஒப்பிடுகையில் 8.7% வீழ்ச்சியாகும் என இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் 2023 ஆண்டில் தற்போது வரையான ஏற்றுமதி வருமானம் 8,010 மில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது.

2022 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 10.1% வீழ்ச்சியாகும்.

சர்வதேச சந்தையில் ஆடைகளுக்கான தேவை குறைந்தமையே ஏற்றுமதி வருமானம் குறைந்தமைக்கான பிரதான காரணம் என இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் – சுகாதாரம் அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான தாய்லாந்து தூதர் பைட்டூன் மஹாபன்னபோர்ன் (Mr. Paitoon Mahapannaporn) மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர்...

சீரற்ற காலநிலை – பனாமுர பகுதியில் பாதிப்பு

எம்பிலிப்பிட்டிய பனாமுர பகுதியில் இன்று (27) மாலை பெய்த கடும் மழையால் பல பகுதிகளில் மண்மேடுகள் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. பனாமுர...

வரி செலுத்துவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு இயந்திரம் உருவாக்கப்படும்

வரி செலுத்துவோர் மத்தியில் வரி செலுத்துவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தும் ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று நிதி பிரதி...