follow the truth

follow the truth

March, 28, 2025
HomeTOP1"நாங்கள் இரண்டாம் தரம் என்று நினைக்கிறீர்கள்? ஒருபோதும் சர்வதேச விசாரணைகள் நடத்தப்படாது"

“நாங்கள் இரண்டாம் தரம் என்று நினைக்கிறீர்கள்? ஒருபோதும் சர்வதேச விசாரணைகள் நடத்தப்படாது” [VIDEO]

Published on

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் உட்பட எந்தவொரு சம்பவம் தொடர்பாகவும் இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ளாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

“Deutsche Welle” எனும் Television Germany உடனான நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தொலைக்காட்சி நேர்காணலில், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு சற்றே ஆவேசமான பதில்களை வழங்கிய ஜனாதிபதி, எந்தவொரு பிரச்சினையிலும் சர்வதேச விசாரணை நடத்தப்படாது என்று வலியுறுத்தினார்.

ஐக்கிய இராச்சியமோ அல்லது ஜேர்மனியோ அவ்வாறான விசாரணைகளை மேற்கொள்ளவில்லை எனவும், எந்த உண்மைகளின் அடிப்படையில் இலங்கை மற்றும் ஆசியர்களை மாத்திரம் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பது எதனை வைத்து முன்னெடுக்கப்படுகின்றது என்றும் இதன்போது ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

விசாரணைகளுக்கு இலங்கையர்கள் மாத்திரமே பயன்படுத்தப்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, கத்தோலிக்க ஆயர்கள் பேரவையிலும் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டீர்களா என ஊடகவியலாளர்களிடம் வினவினார்.

அங்கு Deutsche Welle பத்திரிக்கையாளர் தான் அப்படி ஒரு செயலை செய்யவில்லை என்று தெரிவித்திருந்தார்.

முட்டாள்தனமாக பேசுகிறீர்கள், இந்த கேள்வியை என்னிடம் கேட்க உங்களுக்கு உரிமை இல்லை, நாங்கள் இரண்டாம் தரம் என்று நினைக்கிறீர்கள் , இந்த மேற்கத்திய மனோபாவத்தை நீங்கள் அகற்ற வேண்டும். நீங்கள் நிறுத்துங்கள் அல்லது நான் நிறுத்துகிறேன், நாங்கள் வெளியேறுவோம், இந்தக் கேள்விகளைக் கேட்க உங்களுக்கு உரிமை இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் – சுகாதாரம் அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான தாய்லாந்து தூதர் பைட்டூன் மஹாபன்னபோர்ன் (Mr. Paitoon Mahapannaporn) மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர்...

சீரற்ற காலநிலை – பனாமுர பகுதியில் பாதிப்பு

எம்பிலிப்பிட்டிய பனாமுர பகுதியில் இன்று (27) மாலை பெய்த கடும் மழையால் பல பகுதிகளில் மண்மேடுகள் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. பனாமுர...

வரி செலுத்துவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு இயந்திரம் உருவாக்கப்படும்

வரி செலுத்துவோர் மத்தியில் வரி செலுத்துவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தும் ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று நிதி பிரதி...