இரத்தினபுரி பிரதேசத்தில் இருந்து களுகங்கையின் நீர்மட்டம் மீண்டும் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது இரத்தினபுரி மற்றும் அலகாவ நீர் மானிகளில் களு கங்கையின் நீர் மட்டம் கவனம் செலுத்த வேண்டிய மட்டம் வரை பதிவாகியுள்ளது.
அதன்படி, களு கங்கையின் கிளை நதியான குடா கங்கையின் மில்லகந்த பகுதியில் தொடர்ந்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே களுகங்கையின் புதுபவுல பகுதியில் சிறு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நில்வலா ஆற்றின் நீர்மட்டமும் மீண்டும் உயர்ந்து வருகிறது.