எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை மாகாண பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது.
கடந்த முறை எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போது போக்குவரத்துக் கட்டணத்தை அதிகரிக்காதவர்கள் தமது விருப்பத்திற்கேற்ப அதனைச் செய்ய முடியும் என அகில இலங்கை மாகாணங்களுக்கு இடையிலான பாடசாலை சிறுவர் போக்குவரத்துச் சங்கத்தின் தலைவர் ருவான் பிரசாத் தெரிவித்தார்.