தொடர் கனமழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதேவேளை, கேகாலை மாவட்டத்தின் தெரணியகல மற்றும் ருவன்வெல்ல பிரதேசங்களில் வெளியிடப்பட்ட முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு இரண்டாம் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட, யட்டியந்தோட்டை மற்றும் கேகாலை ஆகிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தின் அலபத்த, கலவான, இரத்தினபுரி, அயகம, அஹலியகொட, கிரியெல்ல, குருவிட்ட, பெல்மடுல்ல மற்றும் நிவித்திகல ஆகிய பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரத்தினபுரி மாவட்டத்தின் கொலன்னா மற்றும் இம்புல்பே பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை மாவட்டத்தின் பிடபெத்தர மற்றும் கொட்டபொல பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதுடன் முலட்டியன மற்றும் அதுரலிய பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட முதல் நிலை எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது.
காலி மாவட்டத்தில் நெலுவ பிரதேசத்தில் இரண்டாம் நிலை மற்றும் எல்பிட்டிய பிரதேசத்திற்கான முதலாம் மட்டத்திற்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பலஸ்முல்ல பிரதேசத்தில் விடுக்கப்பட்ட முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை பகுதியில் விடுக்கப்பட்ட இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சீதாவக, மத்துகம, வல்லவிட்ட, புலத்சிங்கள மற்றும் அகலவத்தை ஆகிய பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும், களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய பிரதேசத்தில் விடுக்கப்பட்ட இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது.