அரசியலமைப்புக்கமைய புத்த சாசனத்தை பாதுகாக்க அரசாங்கம் அர்பணிக்கும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
வரலாறு தொடர்பில் ஆராயும் மாணவர்கள், கலாநிதி, பேராசிரியர்களுக்கான வசதிகளை வழங்கவும் இந்நாட்டின் வரலாறு தொடர்பிலான ஆய்வு மத்திய நிலையம் ஒன்றை உருவாக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேசிய பௌதீக திட்டமிடற் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று (27) ஜனாதிபதி அலுவலத்தில் நடைபெற்ற பூஜாபூமி பத்திரங்களை வழங்கி வைப்பதற்கான நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டுக்குள் மற்றைய மதங்களை அனுட்டிப்பதற்கு இடையூறு ஏற்படாத வகையில் மத ரீதியான மோதல்களை ஏற்படுத்த விளைவோரின் முயற்சிகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல் இருக்குமாறு மக்களை தெளிவுப்படுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதியின் செயலாளர் மகா சங்கத்தினரிடத்தில் வேண்டுகோள் விடுத்தார்.