follow the truth

follow the truth

March, 18, 2025
HomeTOP2சுற்றுலாப் பயணிகளிடம் அதிக தொகை அறவிடும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சுற்றுலாப் பயணிகளிடம் அதிக தொகை அறவிடும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Published on

இவ்வருட இறுதிக்குள் 15 இலட்சம் சுற்றுலாப் பிரயாணிகளை நாட்டுக்கு வரவழைப்பதற்கு அவசியமான ஊக்குவிப்புத் திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாக சுற்றுலாத்துறை பதில் அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதெனவும், அவர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக டெக்ஸி சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் பதில் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டிருந்த போதே பதில் சுற்றுலாத்துறை பதில் அமைச்சர் டயனா கமகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் சுற்றுலா ஈர்பப்பு மிக்க நகரங்களை தூங்கா நகரங்களாக மாற்றியமைக்க வேண்டும என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தின் ஆரம்ப பகுதியில் 10 இலட்சம் சுற்றுலாப் பிரயாணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இவ்வருட இறுதிக்குள் 15 இலட்சம் பேரை வரவழைக்க முடியும் என எதிர்பார்த்திருப்பதாகவும், அதற்காக விசேட ஊக்குவிப்புத் திட்டமொன்றை ஆரம்பித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

வருடத்தின் இறுதி காலப்பகுதியிலேயே நாட்டுக்கு சுற்றுலாப் பிரயாணிகளில் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பெருமளவான சுற்றுலாப் பயணிகளை இந்நாட்டுக்கு வரவழைக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

குறிப்பாக எல்ல, நுவரெலியா, காலி மற்றும் கொழும்பு உள்ளிட்ட சுற்றுலாப் பிரயாணிகள் அதிகளவில் நடமாடும் பகுதிகளில் இரவு நேரங்களில் அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு அவசியமான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

நாட்டில் சுற்றுலா ஈர்ப்பு மிக்க நகரங்களை தூங்கா நகரங்களாக மாற்றியமைக்க வேண்டும் என்றும், சில சட்டத்திட்டங்களை தளர்த்த வேண்டும் என்பதோடு, சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டில் செலவுகளை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுக்க தவறும் பட்சத்தில் நாட்டிற்கு வருமானம் கிட்டாது என்றும் வலியுறுத்தினார்.

சுற்றுலாப் பயணிகளிடத்தில் அதிக தொகையை அறவிடும் உள்நாட்டு வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதோடு, அவர்களை மீண்டும் நாட்டுக்கு வரவழைக்கும் வகையில் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் கடற்றொழில்துறை நவீன மயப்படுத்தப்படும்

இலங்கையில் கடற்றொழில்துறை நவீன மயப்படுத்தப்படும் எனவும், ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கை ஊக்குவிக்கப்படும் எனவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள்...

எதிர்வரும் சில வருடங்களில் கண்டியை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

சுற்றுலாத் துறையை மையப்படுத்தி எதிர்வரும் சில வருடங்களில் கண்டி நகரை அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுற்றுலாத்...

இஸ்லாமிய பாட நூல்களை நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான தடையை நீக்க வேண்டும் – ஹிஸ்புல்லா கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா இன்றைய குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகளை...