உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இன்று (26) ஜேர்மனிக்கு செல்லவுள்ளார்.
பேர்லின் குளோபல் உரையாடலுக்குச் செல்லும் ஜனாதிபதி, மாநாட்டிலும் உரையாற்ற உள்ளார்.
ஜனாதிபதியின் அமெரிக்க விஜயத்தின் மூலம் நாட்டுக்கு சாதகமான பல நன்மைகள் கிடைத்துள்ளதாக காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியின் தலைவர் அஜய் பங்காவுடன் ஜனாதிபதி நடத்திய சந்திப்பில், எதிர்காலத்தில் காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கான திட்டங்கள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு உதவி வழங்கப்படும் என உலக வங்கியின் தலைவர் குறிப்பிட்டார்.