ரயில்வே திணைக்களம், அதிகார சபையாக மாற்றப்பட்டதன் பின்னர் தற்போது நடைமுறையில் உள்ள சீசன் டிக்கெட் என்ற பருவச்சீட்டு முறை ரத்து செய்யப்படும் எனவும் ரயில் கட்டணமும் உயரும் என்றும் சிங்கள மொழி ‘அருண’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ரயில்வே திணைக்களம், அதிகார சபையாக மாற்றப்பட்டதன் பின்னர் இந்த சீர்திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் போக்குவரத்து அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரயில் தொழிற்சங்கங்களுடனான கலந்துரையாடலில் அதிகாரிகள் இந்த முன்மொழிவுகளை முன்வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பருவச் சீட்டு முறையை இல்லாதொழிப்பதன் மூலம் பெருமளவு வருமானத்தைப் பெற முடியும் எனவும், அந்த வருமானத்தில் இருந்து ஊழியர்களின் சம்பளத்தை வழங்க முடியும் எனவும் இக்கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ரயில்வே திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றும் முன்மொழிவுடன், முக்கிய இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகள் ரயில்வேயில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.