பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டமூலங்களை உடனடியாக மீளப்பெற வேண்டும் என சட்டத்தரணிகள் ஒன்றிணைவு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டமூலங்களை வன்மையாகக் கண்டிப்பதாக சட்டத்தரணிகள் ஒன்றிணைவு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
மார்ச் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் குறித்து தற்போது வௌியிடப்பட்டுள்ள சட்டமூலத்தில் கவனத்திற்கொள்ளப்படவில்லை என சட்டத்தரணிகள் ஒன்றிணைவு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த சட்டமூலத்தின் ஊடாக மக்களுக்கு பொறுப்புக்கூறுதல், வெளிப்படைத்தன்மையுடன் செயற்படல் என்பவற்றை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தௌிவாவதாக சட்டத்தரணிகள் ஒன்றிணைவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதம், தவறான அறிக்கைகள், அதனுடன் தொடர்புடைய தவறான விளக்கங்கள் ஆகியவற்றின் வரையறைகள் இரண்டு சட்டமூலங்களிலும் மிகவும் சிக்கலானதாகக் காணப்படுவதாக சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த இரண்டு சட்டமூலங்களும் நீதித்துறையின் விடயங்களுக்கு அச்சுறுத்தலாக காணப்படுவதாக சட்டத்தரணிகள் ஒன்றிணைவு தெரிவித்துள்ளது.