follow the truth

follow the truth

September, 24, 2024
Homeஉள்நாடுஇலங்கையில் கால்பதித்த A24 செய்தி நிறுவனம்

இலங்கையில் கால்பதித்த A24 செய்தி நிறுவனம்

Published on

கடந்த ஜூன் மாதம் 2021 இல் A24 செய்தி நிறுவனம் இலங்கையில் தங்களை முன்னிலைப்படுத்தி செயல்பாடுகளை விரிவுபடுத்தியது.

சர்வதேச மற்றும் உள்ளூர் செய்திகளை வழங்கும் A24 செய்தி நிறுவனம், தற்போது இலங்கையில் பல தொலைக்காட்சி மற்றும் வலைத்தளங்களுக்கு மிகவும் நம்பகமான செய்தி வழங்குநராக மாறியுள்ளது.

எமன், ஈராக், சோமாலியா, லிபியா மற்றும் சிரியா போன்ற நாடுகளில் இடம் பெற்ற உள்நாட்டு போர் மற்றும் மோதல்களை உடனுக்கு உடன் களத்தில் இருந்து தகவல்களை A24 செய்தி நிறுவனம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

“A24 செய்தி நிறுவனம் இலங்கையின் தனியார் மற்றும் அரச துறை சார்ந்த முக்கிய செய்தி ஊடகங்கள் மற்றும் இணையதளங்களுடன் கூட்டணி அமைத்துள்ளது.

இலங்கையில் எமது சேவையை எதிர்வரும் இரண்டாவது காலாண்டில் மேலும் விரிவுபடுத்த அந்த நிறுவனம் எதிர்பார்த்துள்ளதாக அறிவித்துள்ளது.

”எங்களது செய்திகள் சமகால விவகாரங்கள், மனிதாபிமான, பொருளாதார மற்றும் சமூக செய்திகளை அடிப்படையாகக் கொண்டதாகும் என A24 செய்தி நிறுவனத்தின் இலங்கைக்கான முகாமையாளர் ஜெயனி சமரக்கொடி தெரிவித்துள்ளார்.”

”மேலும் இலங்கையின் நம்பிக்கைக்குரிய செய்தி வழங்குநர்களில் ஒன்றாக எங்களின் முன்னேற்றத்தை கண்டு மகிழ்ச்சியடைகிறோம். பல பிரபலமான ஊடகங்களுடனான சிறந்த ஒத்துழைப்புக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என A24 செய்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மொஹமட் எல் அஜ்லோனி தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த வாரம் ஆர்ப்பாட்டங்கள் முற்றாக தடை

இந்த வாரம் ஆர்ப்பாட்டங்கள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால்...

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை

சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்படும் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் அடுத்த மதிப்பாய்வு எதிர்காலத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இதேவேளை புதிய...

இலங்கையர்கள் ஒரு நாளைக்கு 6.5 பில்லியன் ரூபா கடனாளிகளாக..

கடந்த 26 மாதங்களில் உள்ளுரில் ஆட்சியாளர்கள் பெற்ற கடன் தொகையை வைத்துப் பார்த்தால் இந்நாட்டு மக்கள் தினமும் 6.5...