follow the truth

follow the truth

March, 15, 2025
HomeTOP2அரசியல் நோக்கங்களுக்காக நாட்டை படுகுழியில் தள்ளிவிட முற்படாதீர்கள்

அரசியல் நோக்கங்களுக்காக நாட்டை படுகுழியில் தள்ளிவிட முற்படாதீர்கள்

Published on

நாட்டிற்குள் இனவாத மோதல்களை ஏற்படுத்தி தங்களது அரசியல் நோக்கங்களை ஈடேற்றிக் கொள்ள சில அரசியல் குழுக்கள் முயற்சித்து வருவதாக ஜனாதிபதியின் தொழிற்சங்க தொடர்பாடல் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

முப்பது வருட யுத்தம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் விளைவாக நாடு அரசியல் பொருளாதார ரீதியில் சரிவடைந்து கிடந்த நிலையில், தற்போது ஓரளவு முன்னேற்றம் கண்டு வரும்போது நாட்டுக்குள் மீண்டும் இனவாத மோதல்கள் அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் தற்போதைய நிலையை அறிவிக்கும் நோக்கில் சிவில் அமைப்புக்கள் கொழும்பில் இன்று (22) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

செனல் 4 விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்திற்குள்ளும் சில தலையீடுகள் காணப்படுகின்றன. சில அரசியல் குழுக்கள் பல்வேறுபட்ட நிலைப்பாடுகளை முன்வைக்கின்றன. அது தொடர்பிலான சரியான விசாரணையை நடத்த அரசாங்கம் முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது ஜனாதிபதியின் தலையீட்டின் கீழ் அது குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதியரசர்கள் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஆம் தரப்பும் தெரிவுக்குழுவொன்றை நிறுவுமாறு கோரிக்கை விடுத்திருந்தது. அங்கு விருப்பமானவர்கள் சுதந்திரமாக தங்களது கருத்துக்களை தெரிவிக்க முடியும். இருப்பினும் அந்த தகவல்களை சமூகமயப்படுத்தும் போது கவனமாக செயற்பட வேண்டியது அவசியம் என்பதோடு அதுகுறித்த விசாரணைகள் அவசியமில்லை என்று எவரும் வலியுறுத்தவில்லை.

பாதுகாப்பு அமைச்சு அந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள போதும் எதிர்கட்சி போலிப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நாட்டில் பாரிய அழிவினை ஏற்படுத்தியது. அதனால் அதனை மேற்கொண்டவர்களை கண்டறிய வேண்டியது அவசியம். அதற்காக சர்வதேச ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வதும் தவறாகாது.

சில குழுக்கள் நாட்டிற்குள் அரசியல் பிரச்சினைகளை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள். குருந்தி விகாரை மற்றும் திலீபனின் நினைவுத் தின அனுட்டிப்பு உள்ளிட்ட விடயங்களில் அது தெரியவந்துள்ளது. அதனால் அரசியல் நோக்கங்களுக்காக நாட்டை படுகுழியில் தள்ளிவிட முற்படாதீர்கள் என கேட்டுக்கொள்கிறேன்.

கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளின் போதும் அதற்கு எதிராக மக்களை தூண்டிவிடும் முயற்சிகளில் சிலர் ஈடுபட்டடனர். ஆனால் மக்கள் வீதிகளில் இறங்காமல் அமைதியாக ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளித்தனர். அதனால் நாட்டின் நிலைமைகளை அறிந்துகொண்டு செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“கிளீன் ஸ்ரீலங்கா” வின் கீழ் நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் வேலைத்திட்டம்

இன்று (15) உலக நுகர்வோர் உரிமை தினத்தை முன்னிட்டு நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்காக, சமூகத்திற்குள் அணுகுமுறைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டமொன்றை...

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு 3,000 ரூபா கொடுப்பனவு இம்மாதத்தில்

70 வயதைக் கடந்த குறைந்த வருமானம் பெறும் முதியோரருக்கு வழங்கப்படும் 3000 ரூபா கொடுப்பனவு, மார்ச் மாதத்தில், அஸ்வெசும...

இந்தியாவிடமிருந்து 50,000 தடுப்பூசிகள் நன்கொடை

நாட்டில் உள்ள அரசு வைத்தியசாலைகளுக்கு ரூ. 100,000 மில்லியன் பெறுமதியான 50,000 ஃபுரோஸ்மைடு ஊசிகள் (20மிகி/2மிலி) இந்திய உயர்...