அன்று புலனாய்வுத்துறையினர் முறையாக பணியினை முன்னெடுத்திருந்தால் ரணசிங்க பிரேமதாசா இன்று உயிருடன் இருந்திருப்பார் என நாடாளுமன்றஉறுப்பினர் இந்திக்க அனுருத்த இன்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்;
“.. இந்த பார்வையாளர் கூடத்தில் மாணவ மாணவிகள் உள்ளனர், தமிழ் மாணவ மாணவிகள் உள்ளனர், முஸ்லிம் மாணவ மாணவர்கள் உள்ளனர். இந்த நல்லிணக்கம் இந்நாட்டில் இருக்க வேண்டும். இந்த நல்லிணக்கம் தொடர்பில் எதிர்கட்சிகள் எதிர்கட்சித் தமிழ் உறுப்பினர்கள் கதைத்தனர். சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இந்த நல்லிணக்கத்தினை 2015ம் ஆண்டுக்கு பின்னரும் தக்கவைத்துக் கொள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தார்.
வடக்கு கிழக்கினை இணைத்தாரா? வடக்கில் உள்ள பிள்ளைகளுக்கு தேவையான வளங்களை வழங்கினார், வடக்கு பாடசாலைகளை எவ்வலு தூரம் அபிவிருத்தி செய்தார்.. நல்லிணக்கம் ஏற்படுத்துவதை தடுக்கும் வகையில் முன்னர் இருந்த ஆட்சியாளர்கள் யுத்தத்தினை காரணம் காட்டி முழுங்கினார்களா என எமது மனசாட்சிக்கு தெரியும்.
கப்பல்கள் வழங்கியவர்கள் பற்றியும் தெரியும், புலனாய்வுத்துறையின் செயற்பட்ட முறையும் தெரியும், கண்டுகொள்ளது அலட்சியமாக இருந்ததும் தெரியும், எமது எதிர்கட்சித் தலைவரின் தந்தையின் வீட்டில் இருந்த பாபு, பாபு குண்டு வைத்தான், அன்று புலனாய்வுத்துறையினர் ஒழுங்காக பணியினை முன்னெடுத்திருந்தால், புலனாய்வுத்துறை ஏற்றுக் கொண்டிருந்தால் ரணசிங்க பிரேமதாசா இன்று உயிருடன் இருந்திருப்பார்.
ரஞ்சன் விஜேரத்ன அவர்களை அவரது வீட்டில் வைத்து கொலை செய்ததும் LTTE காலத்தில் தான்.. காமினி திசாநாயக்க கொலை, கதிர்காமர் கொலை அன்று புலனாய்வு துறை நடவடிக்கை எடுக்கவில்லை…”