மெக்சிகோ நாடாளுமன்றத்தில் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்ட வேற்று கிரகவாசிகள் என சந்தேகிக்கப்படும் சிறிய உடல்கள் சிறப்பு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும், அந்த உடல்கள் போலியானவை என்று கூற எந்த ஆதாரமும் இல்லை என்றும் மெக்சிகோ மருத்துவ குழு ஒன்று கூறுகிறது.
மெக்சிகோ கடற்படையைச் சேர்ந்த மருத்துவப் பரிசோதகர் ஜோஸ் டி ஜீசஸ் தலைமையில் இந்த மருத்துவக் குழு ஆராய்ச்சிகளை தொடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேற்றுகிரகவாசிகள் என்று சந்தேகிக்கப்படும் உடல்கள் ஒரு வாரத்திற்கு முன்பு பத்திரிகையாளர் ஜேமி மௌசனால் மெக்சிகோ பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
பத்தாண்டுகளாக பறக்கும் தட்டுகள் மற்றும் வேற்று கிரகவாசிகள் குறித்து ஆய்வு செய்து வரும் பத்திரிகையாளர் ஜேமி மௌசான்.
மௌசான் வேற்று கிரகவாசிகள் என சந்தேகிக்கப்படும் உடல்களை பாராளுமன்றத்தில் சமர்பித்த போது மருத்துவர் ஜோஸ் டி ஜீசஸும் உடனிருந்தார்.
CT இல் அசாதாரண உடல்கள் மருத்துவர் ஜோஸ் டி ஜீசஸ் மற்றும் அவரது குழுவினர் ஸ்கேன், ஃப்ளோரோஸ்கோபி லைவ் ஸ்கேன் மற்றும் வழக்கமான எக்ஸ்ரே ஆகியவற்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
எலும்புகளை சேர்த்து தயாரிக்கப்பட்ட உடல்கள் போலியான உடல்கள் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அசாதாரண உடல்களின் எலும்புக்கூடுகள் அடையாளம் காண முடியாத அசாதாரண உயிரினத்தின் எலும்புக்கூடுகள் என சுட்டிக்காட்டிய மருத்துவர் ஜோஸ் டி ஜீசஸ், உடல் ஒன்றின் வயிற்றில் முட்டை போன்ற ஒன்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேற்று கிரகவாசிகள் என சந்தேகிக்கப்படும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான உடல்களை மேலதிக விசாரணைகளுக்காக தங்களிடம் வழங்க வேண்டும் என அமெரிக்க நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.
வேற்றுகிரகவாசிகள் உண்மையானவர்கள் என்றோ அல்லது வேற்றுகிரகவாசிகள் இல்லை என்றோ கூற முடியாது என்று நாசா நம்புகிறது.
நாசாவும் ஜேமி மௌசானைப் பாராட்டி பேசவில்லை. காரணம், இதற்கு முன்னர் வேற்று கிரகவாசிகள் பற்றி அவர் முன்வைத்த ஆதாரங்கள் பொய் என உறுதி செய்யப்பட்டதாலாகும்.