கரிம நானோ நைட்ரஜன் உரத்தை இறக்குவதற்கு இந்திய விமானப்படையின் உதவி தேவை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
‘விவசாயிகள் எங்களிடம் உரம் கேட்டார்கள். எனவே, நனோ நைட்ரஜன் உரங்களை ஏற்றிக்கொண்டு ஆறு விமானங்கள் விரைவில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு புறப்படும். கப்பல்கள் மூலம் உரத்தை இறக்கி வைப்பது சரக்குகளை தாமதப்படுத்தலாம் என்பதால், நாங்கள் இந்திய விமானப்படையிடம் பேசினோம், அவர்கள் உரத்தை கொண்டு வருவார்கள்’ என்று அளுத்கமகே கூறினார்.
மேலும் ஒரு வாரத்தில் விவசாயிகளுக்கும் உரம் விநியோகிக்கப்படும் என்றார்.