அஸ்வெசும பயனாளர்களில் உறுதிப்படுத்தப்பட்ட மேலும் 113,713 பேருக்கு ஜூலை மாதத்திற்கான 709.5 மில்லியன் ரூபா பணம் வங்கிகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி பயனாளிகளின் வங்கி கணக்குகளில் அந்த பணத்தினை வரவு வைப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் தனது x கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.
(1/2) As another phase of “Aswesuma” a payment of Rs.799.5 millions for 113’713 beneficiaries have been paid for the month of July. The banks will credit the beneficiary accounts accordingly pic.twitter.com/FWQk4ooNWa
— Shehan Semasinghe (@ShehanSema) September 20, 2023
அதன்படி, 1,162,245 பயனாளி குடும்பங்களுக்கு ஜூலை மாதத்துக்காக இதுவரை 7,278 மில்லியன் ரூபாய் பணம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பான ஆராய்வு நடவடிக்கை நிறைவடைந்ததன் பின்னர் அனைத்து பயனாளிகளுக்கும் பணம் செலுத்தப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அந்த குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.