follow the truth

follow the truth

March, 15, 2025
HomeTOP2தென் சீனா கடல் வலய வட்டமேசை மாநாடு இலங்கையில்

தென் சீனா கடல் வலய வட்டமேசை மாநாடு இலங்கையில்

Published on

தென் சீனா கடல் வலய 8 ஆவது ஷென்ஸன் வட்டமேசை மாநாடு (South China Sea Buddhist Shenzhen Roundtable) எதிர்வரும் அக்டோபர் 24, 25 மற்றும் 26ஆம் திகதிகளில் இலங்கையில் நடைபெற உள்ளது.

இந்த மாநாடு கொழும்பு ஹுனுபிட்டிய கங்காராம விகாரையினால் நடத்தப்பட இருப்பதோடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஆரம்ப நிகழ்வு நடைபெற உள்ளது.

இந்த வட்டமேசை மாநாட்டின் பூர்வாங்க ஏற்பாடு தொடர்பான கலந்துரையாடல் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.

சீனாவின்ஷென்ஸன் வட்டமேசை மாநாடு வருடாந்தம் நடைபெற்று வருவதோடு ஒற்றுமையுடன் ஒன்றாக பயணித்து பட்டுப்பாதையின் ஞானத்தை பெறுவோம் (Walk Together in Harmony and Gather the Wisdom of the Silk Road) என்ற தொனிப்பொருளின் கீழ் 22 நாடுகளின் பங்கேற்புடன் இம்முறை மாநாடு இலங்கையில் நடைபெறும் என்றும் இதன் போது அறிவிக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் நிகழ்வு

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு இன்று (14)...

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

அம்பலாங்கொடை இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, இடம்தோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர்...

மாணவர்களுக்கு வழங்கப்படும் 6,000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் மார்ச் 31 ஆம்...