ஜப்பான் தேர்தலில் பிரதமர் புமியோ கிஷிடா தலைமையிலான ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முழுமையாக கடைபிடித்து, பலத்த பாதுகாப்புடன் ஜப்பான் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது.
வாக்குகள் எண்ணப்பட்டதில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சிக்கு 291 இடங்கள் கிடைத்துள்ளன. லிபரல் ஜனநாயகத்தின் கூட்டணி கட்சி 32 இடங்களில் வென்றுள்ளது. தேர்தல் வெற்றி மூலம் புமியோ கிஷிடா, மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளார்.
ஜப்பானின் பிரதமரும் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவருமான புமியோ கிஷிடா, டோக்கியோவில் உள்ள கட்சித் தலைமையகத்தில் வெற்றியை கொண்டாடினார்.