follow the truth

follow the truth

September, 24, 2024
Homeஉள்நாடு15 நாட்களுக்கு அமுலாகும் புதிய சுகாதார நடைமுறைகள்

15 நாட்களுக்கு அமுலாகும் புதிய சுகாதார நடைமுறைகள்

Published on

மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து இன்றிலிருந்து (01) எதிர்வரும் 15ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளா் நாயகத்தினால் புதிய சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அந்த புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கமைய நாளாந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஆலோசனைத் திட்டமொன்றும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளாா் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளாா்.

காலந்துரையாடல்கள், மாநாடுகளை நடத்தும்போது முடிந்தளவு வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறும், கூட்டங்களை இடம்பெறும் மண்டபங்களில் 1/3 பங்கானவர்கள் மாத்திரமே பங்குகொள்ள வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.

திருமண நிகழ்வுகளை நடத்தும்போது அதற்காக அதிகப்பட்சமாக 100 போ் மாத்திரமே பங்குகொள்ள முடியுமென்றும், அவ்வாறு இல்லாவிட்டால் திருமண நிகழ்வு இடம்பெறும் மண்டபத்தின் அடிப்படையில் 1/3 பங்கானவர்கள் மாத்திரமே பங்கு கொள்ளவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளாா்.

அதேவேளை திருமண நிகழ்வொன்று திறந்த வெளியில் இடம்பெறுமாக இருந்தால் 150 போ் வரையில் பங்குப்பற்றலாம்.

தியட்டர்கள், நாடக அரங்குகள் 25 சதவீதமானவர்கள் மாத்திரமே பங்குப்பற்ற முடியும்.

அலுவலகங்கள், விற்பனை நிலையங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட சகல நிறுவனங்களும் சுகாதார ஆலோசனைகளுக்கமையவும் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கமையவும் முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் கொரோனா நோய்தொற்றின் புதிய அலை தோற்றம் பாரிய ஆபத்து நிலையை சந்திக்க நேரிடும்.

அந்த ஆபத்திலிருந்து எம்மை பாதுகாத்து கொள்ள வேண்டுமென்றால் சகலரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் கோரியுள்ளாா்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கையிருப்பிலுள்ள எரிபொருள் குறித்து காஞ்சனா விஜேசேகர அறிவிப்பு

நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விளக்கமளித்துள்ளார். அவரது அதிகாரப்பூர்வ...

ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளராக ஆனந்த விஜயபால நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தனிப்பட்ட செயலாளராக கே. ஆனந்த விஜயபால நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்...

பங்குச் சந்தை விலைக் குறியீடு உயர்ந்துள்ளது

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஒரு நாளின் பின்னர், கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண்...