ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றியடையச் செய்யப்போய் பின்னர் அரசியல் ரீதியாக தான் தோற்றுப்போனதாக கொழும்பு மேயர் வேட்பாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் அக்கட்சியின் தலைவர்கள் முன்னிலையில் வலியுறுத்திய செய்தியினை பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மறுத்துள்ளார்.
இந்த செய்தியானது உண்மைக்கு புறம்பானது என்றும் தான் குறித்த சம்பவம் தொடர்பில் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும், சிங்கள மொழி ஊடகம் ஒன்று இது தொடர்பிலான செய்தியினை வெளியிட்டிருப்பது கவலையளிப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் டெய்லி சிலோனுக்கு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் நேற்று டெய்லி சிலோன் தனது கிசுகிசு பக்கத்திலும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இணைப்புச் செய்தி
முஜிபுர் தீர்மானம் எடுக்க இது தானாம் காரணம்