இங்கிலாந்து சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித் கொரோனா உறுதியானதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
சஜித் ஜாவித் கொரோனா தடுப்பூசிகளின் இரு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கிடையே, கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் போரிஸ் ஜான்சன் இல்லத்திற்கு ஜாவித் சென்றதாக கூறப்படுகிறது. எனினும், பிரதமர் போரிஸ் ஜான்சனை நேரடியாக ஜாவித் சந்தித்தாரா என்பது பற்றி அவரது செய்தி தொடர்பாளர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 26-ம் திகதி வரை தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.