ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை (Vladimir Putin) சந்திப்பதற்காக வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் ரஷ்ய எல்லைக்குள் நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது குண்டு துளைக்காத கவச ரயிலில் பயணிக்கும் கிம், விளாடிவோஸ்டாக் நகரில் புதினை சந்திக்க உள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும், ரயில் இலக்கை அடைய இன்னும் பல மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது.
உக்ரைனில் நடக்கும் போருக்கு வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களைப் பெற ரஷ்யா விரும்புவதாக அமெரிக்கா நம்புகிறது.
அடுத்த சில நாட்களில் இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெறும் என கிரெம்ளின் உறுதி செய்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் வடகொரியாவிற்கு விஜயம் செய்த போது ஆயுதங்களை கண்டதை அடுத்து இந்த சந்திப்பு தூண்டப்பட்டதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
நான்கு ஆண்டுகளில் வட கொரியத் தலைவரின் முதல் வெளிநாட்டுப் பயணமான கிம் மற்றும் புடினும் 2019 இல் விளாடிவோஸ்டாக்கில் சந்தித்தனர்.