follow the truth

follow the truth

January, 24, 2025
Homeவிளையாட்டுஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான நியூசிலாந்து குழாம்

ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான நியூசிலாந்து குழாம்

Published on

இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறும் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கெடுக்கும் 15 பேர் அடங்கிய நியூசிலாந்து கிரிக்கெட் குழாமானது அறிவிக்கப்பட்டுள்ளது.

கேன் வில்லியம்சன் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள நியூசிலாந்து குழாத்தில் வேகப் பந்துவீச்சாளர்களான கைல் ஜேமிசன், அடம் மில்னே ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் சபையின் வீரர் ஒப்பந்தத்திற்குள் அடங்காத வீரர்களான ட்ரெண்ட் போல்ட் மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

இதேவேளை, அணியின் வேகப் பந்துவீச்சினை பலப்படுத்தும் வீரர்களாக ட்ரெண்ட் போல்ட் உடன் டிம் சௌத்தி, லோக்கி பெர்குஸன் மற்றும் மேட் ஹென்ரி ஆகிய வீரர்கள் காணப்பட சகலதுறை வீரர்களான டேரைல் மிச்சல் மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் வேகப் பந்துவீச்சாளர்களாக மேலதிக நம்பிக்கை தருகின்றனர். அதேநேரம் உபாதைக்குள்ளான சுழல்பந்து சகலதுறை வீரர் மைக்கல் பிரஸ்வெல் உலகக் கிண்ணத்தில் ஆடும் வாய்ப்பினை இழக்கின்றார்.

இதேநேரம், உலகக் கிண்ண குழாத்தில் உள்வாங்கப்பட்டிருக்கும் கேன் வில்லியம்சன் உபாதை ஒன்றில் இருந்து தேறி வரும் நிலையில் கேன் வில்லியம்சனிற்குப் பதிலாக டொம் லேதம் நியூசிலாந்து குழாத்தினை வழிநடாத்துவார் என எதிர்பார்க்கப்பட்டிருக்கின்றது.

நியூசிலாந்து குழாம்

கேன் வில்லியம்சன் (தலைவர்), ட்ரெண்ட் போல்ட், மார்க் சப்மன், டெவோன் கொன்வெய், லோக்கி பெர்குஸன், மேட் ஹென்ரி, டொம் லேதம் (பிரதி தலைவர்), டேரைல் மிச்சல், ஜிம்மி நீஷம், கிளன் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிச்சல் சான்ட்னர், இஸ் சோதி, டிம் சௌத்தி, வில் யங்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐசிசி டெஸ்ட் அணியில் கமிந்து மென்டிஸ்

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் (ஐ.சி.சி) இன்று (24) அறிவித்த 2024 டெஸ்ட் அணியில் கமிந்து மென்டிஸ் இடம்பெற்றுள்ளார். இந்தக் அணியில்...

ஐசிசி மகளிர் ஒருநாள் அணி அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சிறந்த மகளிர் ஒருநாள் கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இலங்கை அணியின் சமரி அத்தபத்து...

ஐசிசி ஆண்டின் சிறந்த ஒருநாள் அணியை அறிவித்துள்ளது

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2024 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் அணியை அறிவித்துள்ளது. அணியின் தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன்,...