விவசாயியை பற்றி இந்த அரசிடம் எவ்வளவு பேசினாலும் இந்த அரசு என் பேச்சை கேட்காது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இரசாயன உரங்களை வழங்குமாறு கோரி மொரகஹகந்த மற்றும் எலஹெர கமநல இயக்கத்தின் 41 விவசாய அமைப்புக்கள் கடந்த 24 ஆம் திகதி தொடர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனர். இந்த உண்ணாவிரதத்தில்
கலந்து கொண்ட மைத்திரிபால சிறிசேன விவசாயிகளுடன் பேசும் போதே இதனை தெரிவித்தார்.
விவசாயிகளின் உரப்பிரச்சினை குறித்து விவசாய அமைச்சரிடம் பலமுறை விவாதித்தேன். ஆனால் நல்ல பதில் வரவில்லை. சில அமைச்சர்கள் என்னை அவதூறாகப் பேசுகின்றனர். விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளால் பொலன்னறுவைக்கு செல்ல வழியில்லை என்றேன். இந்த அடிப்படையில்தான் அந்த அமைச்சர்கள் என் மீது அவதூறு பரப்புகிறார்கள். அவர்கள் பற்றி நான் கவலைப்படவில்லை என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உலகில் வேறு எந்த நாடும் கரிம உரங்களைப் பயன்படுத்தி 100 வீதம் பயிரிடுவதில்லை எனவும் அவுஸ்திரேலியாவில் கூட 50 வீதமான கரிம உரங்களையே பயிரிடுவதாகவும் சிறிசேன தெரிவித்தார். 1980 களில் இருந்து தான் தனது விவசாயிகளுக்காக மட்டுமே நின்றதாகவும், விவசாயிகள் இறந்த போது விவசாயிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக பொலன்னறுவையில் முதன்முறையாக சவப்பெட்டிகளை ஏந்தி பிரச்சாரம் செய்ததாகவும் தெரிவித்தார்