2023 ஆசியக் கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றின் இரண்டாவது போட்டி இன்று (09) இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பிற்பகல் 03 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
பகல் மற்றும் இரவு போட்டியாக நடைபெறும் இப்போட்டிக்கு மழை இடையூறு ஏற்படுத்துவது குறித்தும் பல்வேறு கணிப்புகள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும், வளிமண்டலவியல் திணைக்களம் நேற்றைய தினம் அறிவித்தபடி, கொழும்பு மாவட்டத்தில் இடைக்கிடை மழை பெய்தாலும் கடும் மழை பெய்யும் அபாயம் இல்லை.
இரண்டு ஆரம்ப சுற்றுப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி, இரண்டு ஆரம்ப சுற்றுப் போட்டிகளில் ஒன்றில் பங்களாதேஷ் வெற்றி பெற்றுள்ள நிலையில், நல்ல உற்சாகத்துடன் போட்டிக்குள் நுழையும் என தெரிவிக்கப்படுகின்றது.