follow the truth

follow the truth

March, 28, 2025
HomeTOP1தயாசிறி பதவியில் இருந்து வெளியேற்றப்படுவார் என 50 இலட்சம் பந்தயம்

தயாசிறி பதவியில் இருந்து வெளியேற்றப்படுவார் என 50 இலட்சம் பந்தயம்

Published on

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்படுவதற்கு முந்தின நாள் இரவு ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் 50 இலட்சம் ரூபா பந்தயம் பிடித்ததாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளதாகவும், அவருடன் பந்தயம் கட்டிய மற்றைய தரப்பு தோல்வியடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இது ஒரு கட்சியின் பதவிக்கான அதிகூடிய பந்தயம் எனவும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி தயாசிறி ஜயசேகர அப்பதவியிலிருந்து நீக்கப்படுவார் என எதிர்வுகூறிய நாடாளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தின் ஓய்வறையில் வைத்து மக்களுக்கு இந்த பந்தயம் குறித்து அறிவித்துள்ளார்.

என்னை கட்சியில் இருந்து நீக்க முன்னர் (செப்டம்பர் 4) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஆளும் கட்சிக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே 50 இலட்சம் பந்தயம் கட்டப்பட்டதாக வார இறுதிப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய அரசியல் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பந்தயத்தில் வெற்றி பெற்ற உறுப்பினர் கூறிய கணிப்பு உண்மையாகியுள்ளதாகவும், அதன்படி 100 இலட்சம் அவரிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அந்தப் பதவியிலிருந்தும் கட்சி உறுப்புரிமையிலிருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

இதன்படி, அதன் பிரதிப் பொதுச் செயலாளராக கடமையாற்றிய சரத் ஏக்கநாயக்க, புதிய பதில் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாணவர் செயற்பாட்டாளர் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உள்ளிட்ட இருவரும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை...

தரமான உணவு நியாயமான விலையில் – நாடளாவிய ரீதியில் புதிய உணவகங்களை நிறுவ திட்டம்

மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் தரமான, போதியளவான உணவை நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை செய்துகொடுக்க,...

மாணவர்களுக்கு வழங்கப்படும் 6,000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 31...