உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுகின்றதா அல்லது உரிய முறையில் பயன்படுத்தப்படாமை எமது தவறா என்பதை இந்நாட்டு இளைஞர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இளைஞர்களின் மறைக்கப்பட்ட திறமைகள் மற்றும் அவர்களின் தேசிய பங்களிப்பை மதிப்பிடுவதற்காக பெண்கள் முகாமைத்துவ நிறுவனம் (றுஐஆ) மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் (Nலுளுஊ) இணைந்து ஏற்பாடு செய்த ‘புதிய தலைமுறை விருதுகள் 2021’ விழாவில் அமைச்சர் உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார்
பிரான்ஸால் மட்டுமே கோபுரங்கள் அமைக்க முடியும் என நாம் சிறுவயதில் நினைத்தாலும், நாங்களும் கோபுரங்களை கட்டியுள்ளோம் என அமைச்சர் நினைவுபடுத்தினார்.
கடலை நிரப்பி நகரங்களை உருவாக்க முடியாவிட்டாலும் மத்திய கிழக்கால் முடியும் என்றாலும் நாமும் துறைமுக நகரை நிர்மாணித்துள்ளோம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.