follow the truth

follow the truth

September, 24, 2024
HomeTOP1விமல், கம்மன்பில, வாசு உள்ளிட்ட 11 கட்சிப் பிரதிநிதிகளுக்கு எதிராக நடவடிக்கை - சாகர காரியவசம்

விமல், கம்மன்பில, வாசு உள்ளிட்ட 11 கட்சிப் பிரதிநிதிகளுக்கு எதிராக நடவடிக்கை – சாகர காரியவசம்

Published on

அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் விசேட கோரிக்கை விடுப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்த குழுவின் செயற்பாடுகள் மற்றும் நடத்தைகள் அரசாங்கத்தின் எதிர்காலத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்பதனால் இந்த கோரிக்கையை முன்வைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் உறுதியான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாத நிலையில் யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் கவலைப்பட வேண்டாம் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கட்சித் தலைமைக் கூட்டத்தில் தெளிவுபடுத்தியிருந்த போதிலும் இவ்வாறு அரசாங்கத்தை விமர்சிப்பது மிகவும் அசிங்கமான செயல் என செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பூர்வாங்க உடன்பாடு மாத்திரமே உள்ளதால், ஒப்பந்தத்தை வரைவதற்கு முன்னர் அனைத்து தரப்பினரும் சிபாரிசு செய்ய வேண்டும் என நிதியமைச்சர் கூட்டத்தில் தெளிவுபடுத்தியதாக காரியவசம் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகளின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற கேள்வியும், சந்தேகமும் எழுந்துள்ளதாகவும் அவர் கூறினார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கையிருப்பிலுள்ள எரிபொருள் குறித்து காஞ்சனா விஜேசேகர அறிவிப்பு

நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விளக்கமளித்துள்ளார். அவரது அதிகாரப்பூர்வ...

ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளராக ஆனந்த விஜயபால நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தனிப்பட்ட செயலாளராக கே. ஆனந்த விஜயபால நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்...

பங்குச் சந்தை விலைக் குறியீடு உயர்ந்துள்ளது

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஒரு நாளின் பின்னர், கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண்...