தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய திலான் மிரண்டா கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபை ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும், பின்னர் முறையான விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம தெரிவித்துள்ளார்.
குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான அறிக்கை போக்குவரத்து அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தலைவர் மேலும் தெரிவித்தார்.