தாம் ஒருபோதும் சந்தர்ப்பவாத அரசியலை செய்யமாட்டேன் ஆனால் கொள்கை ரீதியான அரசியலையே செய்வேன் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (06) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் போது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தாம் உட்பட அவரது முழு குடும்பமும் நிதிக் குற்றப்பிரிவு, பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக இருந்தனர்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் ராஜபக்ச எவ்வாறு ஒன்றிணைந்து புலனாய்வுப் பிரிவின் தலைவரைக் கண்டுபிடித்து ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலைத் திட்டமிட்டார் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சேனல் 4 அலைவரிசைக்கு ராஜபக்ச பெயருடன் பரம்பரை வெறுப்பு இருப்பதாகவும், அதனை ஊடக நிறுவனமாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், அது திரைப்படம் தயாரிக்கும் நிறுவனம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.