பராக்கிரம மன்னருக்குப் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது அரிசிக் கப்பல் ஒன்று வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன கூறுகிறார்.
இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு நபர்களால் சரிதைகளுக்கு பங்கம் விளைவிக்கப்பட்டு வருவதாகவும் இவ்வாறான செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாட்டை அபிவிருத்தி செய்த கட்சி எனவும், நாட்டை மூன்றாம் உலகத்தில் இருந்து நடுத்தர நிலைக்கு கொண்டு சென்றது தமது அரசாங்கமே எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டார்.