சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை உட்பட பல சட்டமூலங்கள் மீது விவாதம் நடத்துவதற்காக இன்று பாராளுமன்றம் கூடவுள்ளது.
ஆயுர்வேத திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (05) நடைபெறவுள்ளது.
மேலும், தனியார் சட்டமூலம் உட்பட மேலும் பல திருத்தங்கள் இன்று இரண்டாவது முறையாக வாசிக்கப்படுகின்றன.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நாளை மறுதினம் மற்றும் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அதன்படி, இதுதொடர்பான வாக்குப்பதிவு இம்மாதம் 8ஆம் திகதி பிற்பகல் நடைபெறும்.
இதேவேளை, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமிய தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன், சுகாதார அமைச்சருக்கு எதிர்ப்புத் தெரிவித்து காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று மக்கள் மனுவொன்றும் கைச்சாத்திடப்பட்டது.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் நேற்று ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கருத்து வெளியிட்டார்.
இதேவேளை, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக தெரிவித்தார்.