follow the truth

follow the truth

November, 13, 2024
HomeTOP1ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் : 269 பேரை பலியெடுத்த அரசியல் பலம்? (VIDEO)

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் : 269 பேரை பலியெடுத்த அரசியல் பலம்? (VIDEO)

Published on

2019 ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கையில் தொடர்ச்சியான தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

சில இலங்கை அரசாங்க அதிகாரிகள் குண்டுவெடிப்புகளுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டுகின்ற உயர்மட்ட Channel 4 Dispatches பிரத்தியேக நேர்காணல்களைக் கொண்டுள்ளது.

நேர்காணலில் 2018ம் ஆண்டு காலப்பகுதியில் மூத்த இராணுவ புலனாய்வு அதிகாரி சுரேஷ் சாலே மற்றும் இஸ்லாமிய அரசுடன் இணைந்த குண்டுவீச்சுக்காரர்களுக்கு இடையே ஒரு சதித்திட்டத்தை திட்டமிடுவதற்காக ஒரு சந்திப்பை நடத்தியதாக கூறப்படுகிறது.

இலங்கையை சீர்குலைத்து ராஜபக்சர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பை வழங்குவதே இதன் நோக்கமாகும்.

“.. கலந்துரையாடல் முடிந்தது, சுரேஷ் சாலே என்னிடம் வந்து, ராஜபக்சர்கள் இலங்கையில் பாதுகாப்பற்ற சூழ்நிலையை விரும்புவதாகவும், அதுதான் கோட்டாபய ஜனாதிபதியாவதற்கு ஒரே வழி என்றும் என்னிடம் கூறினார்..” என ஹன்சிர் ஆசாத் மௌலானா தெரிவித்திருந்தார். “தாக்குதல் ஒன்று அல்லது இரண்டு, மூன்று நாட்களில் திட்டமிடப்படவில்லை, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக திட்டம் தயாரிக்கப்பட்டது.”

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு, பாதுகாப்பை மீட்டெடுப்பதாக உறுதியளித்து கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியைப் பிடித்தபோது, ​​சுரேஷ் சாலே இராணுவப் புலனாய்வுத் தலைவராக பதவி உயர்வு பெற்றார்.

கோட்டாபய இதற்கு முன்னர் தனது சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கடமையாற்றினார். அவர்கள் கூட்டாக தமிழ் புலிகளுக்கு எதிராக போரிடுவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டனர், ஆனால் 2015 இல் அரச அதிகாரத்தை இழந்தனர். பின்னர், அவர்கள் ஆட்சியில் நடந்த சட்டத்திற்கு புறம்பான கொலைகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் பெரிய அளவிலான ஊழல்கள் பற்றிய விசாரணைகளை எதிர்கொண்டனர்.

பலம் வாய்ந்த ராஜபக்ஷ குடும்பம் இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்டதாக இலங்கையில் நீண்ட காலமாக வதந்திகள் பரவி வருகின்றன, ஆனால் சேனல் 4 இன் முன்னாள் செய்தி ஆசிரியர் Ben De Pear இனால் உருவாக்கப்பட்ட Basement Films என்ற ஆவணப்படத்தால் இவை படமாக்கப்பட்டிருந்தது.

கடந்த வருடம் இலங்கையின் பொருளாதாரச் சரிவு தொடர்பில் மக்கள் எழுச்சிக்கு மத்தியில் கோட்டாபய பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியல் கூட்டாளியான பிள்ளையானுக்கு பல வருடங்களாக உதவியாளராக இருந்து வந்த மௌலானா, கடந்த வருடம் இலங்கையை விட்டு வெளியேறி ஐரோப்பிய உளவு நிறுவனங்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் தனது சாட்சியத்தை அளித்துள்ளார். அவரது கூற்றுகள் நம்பகமானவையா என அவர்கள் விசாரித்து வருகின்றனர்.

2019-ம் ஆண்டு புதிய அரசு பதவிக்கு வந்ததும் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த அதிகாரிகள் அனைவரும் இடமாற்றம் செய்யப்பட்டு விசாரணை முற்றிலுமாக சீர்குலைந்ததாக பெயர் வெளியிடப்படாத மற்றொரு மூத்த அரசு அதிகாரி தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆட்கள் பதிவுத் திணைக்களத்தினால் விசேட அறிவிப்பு

நவம்பர் 14, 2024 அன்று, ஆட்கள் பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை உட்பட அனைத்து பொது சேவைகளும்...

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இம்மாதம் 21 ஆம் திகதி

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இம்மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அரசியலமைப்பின் 70 ஆம் உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி...

தேர்தல் பணிகளுக்கு வருகை கட்டாயம் : நியமிக்கப்பட்ட அரச அதிகாரிகளுக்கு அறிவிப்பு

தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரிகளும் அந்த நியமனங்களை மாற்றவோ அல்லது இரத்து செய்யவோ முடியாது எனவும், தேர்தல்...