சூடான் தலைநகர் கார்டூமில் வான்வழித் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர்.
கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அந்நாட்டு இராணுவம் இந்த வான் தாக்குதலை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இத்தாக்குதலில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் மேலும் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சூடான் இராணுவத்துக்கும், துணை இராணுவ கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே நடந்து வரும் மோதல் காரணமாக இதுவரை 1100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் அறிக்கையின்படி, சூடானுக்குள் சுமார் 2.2 மில்லியன் மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர், மேலும் அரை மில்லியனுக்கும் அதிகமானோர் அண்டை நாடுகளில் உள்ளனர்.