உக்ரைன் பாதுகாப்பு அமைச்சரை பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அதன்படி உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் அலெக்ஸி ரெஸ்னிகோவ் (Oleksii Reznikov) பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அவரது காலியான பதவிக்கு உயர் பதவியில் இருந்த Rustem Umerov ஐ நியமித்தார்.
புதிய நியமனத்தை அறிவித்த ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, போருக்கு புதிய போர்வையை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
57 வயதான ரெஸ்னிகோவ், ரஷ்ய-உக்ரைன் போர் தொடங்கிய பெப்ரவரி 24, 2022 முதல் நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தார்.
நாட்டில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பில் பலத்த விசாரணைகள் இடம்பெற்று வரும் பின்னணியில் இது இடம்பெற்றுள்ள போதிலும் றெஸ்னிகோவ் மீது நேரடியாக எவ்வித ஊழல் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவில்லை என்பது விசேட அம்சமாகும்.
ஐக்கிய இராச்சியத்திற்கான புதிய தூதுவராக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் நியமிக்கப்பட உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.