இராஜதந்திர குழுவுடனான கலந்துரையாடலும், பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு தொடர்பான அபிவிருத்திகள் குறித்தும் கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரப் படைக்கு விளக்கமளிக்கும் நிகழ்வும் நேற்று (01) வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ, நீதி இராஜாங்க அமைச்சர் ஜயாஅனுராதா, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஏ. விஜேவர்தன மற்றும் செயலாளர் நீதியரசர் வசந்த பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளேவினால் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் முக்கிய அம்சங்கள் பற்றிய விளக்கமளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.