follow the truth

follow the truth

November, 27, 2024
HomeTOP1மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் சேர்த்தது குறித்து தனக்குத் தெரியாது - பசில் ராஜபக்ஷ

மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் சேர்த்தது குறித்து தனக்குத் தெரியாது – பசில் ராஜபக்ஷ

Published on

இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகத்தினால் மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தமக்கு அறிவிக்கப்படவில்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும் சீனத் தூதரகத்தினால் மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளமை அமைச்சருக்குத் தெரியுமா என வினவியபோது, ​​அவ்வாறானதொரு நிகழ்வு குறித்து தனக்கு அறிவிக்கப்படவில்லை என அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கடனுதவி மற்றும் இரு தரப்பினருக்கு இடையிலான ஒப்பந்தங்களின்படி பணம் செலுத்தத் தவறியதற்காக இலங்கையில் உள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகத்தால் இலங்கை மக்கள் வங்கி நேற்று (29) கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

இந்த முடிவு சீனாவின் வர்த்தக அமைச்சகத்திடமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உழவு வண்டி – மாயமான 8 பேரையும் மீட்கும் பணிகள் தொடர்கிறது

அம்பாறை - காரைதீவு - மாவடிப்பள்ளி பகுதியில் வெள்ளத்தில் கலப்பை அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன 6 சிறுவர்கள்...

ஓமந்தை பகுதியில் வௌ்ளம்- சாரதிகளுக்கான அறிவித்தல்

யாழ்ப்பாணம் செல்லும் A9 பிரதான வீதியின் ஓமந்தை பகுதியில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எனவே, குறித்த வீதியைப்...

இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்கள் பற்றி IMF பணிப்பாளரின் மதிப்பீடு

இலங்கை அதிகாரிகள் தங்களது சீர்திருத்த நிகழ்ச்சி நிரலில் நிலைத்து நின்று பொருளாதாரத்தை நிலையான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான...