முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீரகட்டியில் உள்ள வீட்டிற்கு மின்சாரம் வழங்கிய சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கணக்காய்வாளர் நாயகத்திற்கு உத்தரவிடுமாறு கோரி உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இ.ஜே.விஜித குமார சட்டத்தரணியினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.