follow the truth

follow the truth

November, 17, 2024
HomeTOP1நாளை முதல் மூன்று நாட்களுக்கு மழை அதிகரிக்கும்

நாளை முதல் மூன்று நாட்களுக்கு மழை அதிகரிக்கும்

Published on

எதிர்வரும் செப்டெம்பர் 01, 02, மற்றும் 03 ஆம் திகதிகளில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சூரியன் தெற்கே நகரும் போது, ​​அது ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 7 வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேர் மேலே உள்ளது.

இன்று (31ம் திகதி ) மதியம் 12:11 மணிக்கு, அடப்பங்குளம் (வவுனியா மாவட்டம்), தூதுவெவ (அநுராதபுரம் மாவட்டம்) மற்றும் நிலாவெளி (திருகோணமலை மாவட்டம்) ஆகிய இடங்களில் சூரியன் உதிக்கும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசியப்பட்டியல் மூலம் எம்.பி ஆகிறார் திலித் ஜயவீர

சர்வஜன அதிகாரம் கட்சிக்கு கிடைக்கப் பெற்ற தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கட்சியின் தலைவர் தொழிலதிபர் திலித் ஜயவீர நியமிக்கப்பட்டுள்ளார். இதனை...

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் நாளை பதவிப்பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் நாளை(18) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளனர். இந்த நிகழ்வு நாளை(18)...

IMF குழு இன்று இலங்கை வருகை

பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வை மேற்கொள்வதற்காகச் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இன்று இலங்கைக்கு வருகைத் தரவுள்ளதாக...