தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிய லேட்டஸ்ட் படமான ஜெயிலர் மீதுதான் தற்போது உலகின் கவனம் குவிந்துள்ளது.
ஜெயிலர் படத்துக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த சிறப்பு உத்தரவுதான் இதற்குக் காரணம்.
குறித்த திரைப்படத்தின் பல பிரேம்களில் தோன்றும் ஒப்பந்த கொலையாளி ஒருவர் ஐபிஎல் கிரிக்கெட் அணியின் RCB ஜெர்சியை அணிந்துள்ளார்.
திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வழங்கி பிரேம்களை தயார் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, குறித்த பிரேம்களை டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திருத்துவதற்கு திரைப்பட நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.
நீதிமன்ற உத்தரவின்படி, இவ்வாறு தயாராகியுள்ள ஜெயிலர் திரைப்படம் செப்டம்பர் 1ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் திரையிடப்படுகிறது.
மேலும், இந்திய சினிமாவின் வசூல் சாதனைகளை ஏற்கனவே ஜெயிலர் முறியடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதன்படி ஜெயிலர் உலகம் முழுவதும் திரையிடப்பட்டதன் மூலம் கிட்டத்தட்ட 550 கோடி இந்திய ரூபாயை சம்பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.