follow the truth

follow the truth

September, 23, 2024
Homeஉள்நாடு2020 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை கையளிப்பு

2020 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை கையளிப்பு

Published on

2020 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி.விக்ரமரட்ன நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளித்தார்.

இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக மற்றும் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த செயற்பாடை வினைத்திறனாக முன்னெடுப்பதற்கு அரசியலமைப்பின் 154ஆவது சரத்தின் கீழ் கணக்காய்வாளர் நாயகத்துக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளுக்கு அமைய 2020 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை இவ்வாறு கையளிக்கப்பட்டது.

இதற்கமை அமைச்சுக்கள், திணைக்களங்கள், அரசாங்கக் கூட்டுத்தாபனங்கள், அதிகாரசபைகள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள்,வெளிநாட்டு உதவித் திட்டங்கள் உள்ளிட்ட ஒன்பது பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்படும் கணக்காய்வுகள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப்...

ஊரடங்கு சட்டம் 12 மணிக்கு தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (22) மதியம் 12 மணிக்கு தளர்த்தப்படும் என...

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...