இந்நாட்டில் வளர்ப்பு யானைகளுக்கு யானைக்கால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக கண்டி எசல பெரஹராவில் ஈடுபட்டுள்ள யானைகள் தொடர்பில் விசேட விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கண்டியில் இந்த ஆண்டுக்கான எசல பெரஹரா திருவிழாவில் பங்குகொள்ளும் யானைகளின் உடல்நிலையை பரிசோதிப்பதற்காக நேற்று (27) இடம்பெற்ற விசேட கால்நடை மருத்துவ பரிசோதனையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அசோக தங்கொல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தவிர, யானைகளுக்கு காசநோய்க்கான பரிசோதனையும் செய்யப்படுவதாகவும், தற்போதுள்ள அடக்கமான யானைகளில், 50%க்கு கண் நோய்கள் இருப்பதாகவும் பேராசிரியர் கூறினார்.
தற்போதுள்ள பெரும்பாலான யானைகள் வயதாகிவிட்டதால், அவை மிக விரைவாக நோய்களுக்கு பலியாகும் அபாயம் உள்ளதாகவும் அவர் கூறினார்.
பெரஹரா விழா தொடங்கும் முன் தினமும் யானைகளின் உடல் நலம் பரிசோதிக்கப்படுவதாகவும், ஏதேனும் நோய் கண்டறியப்பட்டால் பெரஹரவில் இருந்து அகற்றப்படுவதாகவும் பேராசிரியர் மேலும் கூறினார்.