தற்போது நாட்டில் நடைமுறையில் காணப்படும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை, ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு நீக்கத் தீர்மானிக்கப்பட்டது.
பொதுமக்களின் வாழ்க்கை முறைமை பாதிக்காத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று (29) முற்பகல் இடம்பெற்ற கொவிட் தொற்றொழிப்புச் செயலணிக் கூட்டத்தின் போதே, ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.