வங்கிகள் வழங்கும் கடனுக்கான பொது வட்டி வீதத்தை கொள்கை வட்டி வீதத்துடன் குறைக்கும் புதிய சுற்றறிக்கை இன்று(25) வெளியிடப்படும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அறிவித்துள்ளார்.
நேற்றைய(24) நிதிச் சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிப்பதற்காக கொழும்பில் நேற்று ஊடகவியலாளர் மாநாடு ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததுடன், வட்டி விகிதங்கள் ஏதோ ஒரு வகையில் குறைந்துள்ள போதிலும், வட்டி வீதம் இன்னமும் போதுமானதாக இல்லை என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பின் பின்னர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட வெளிநாட்டுக் கடனை செலுத்தும் நடவடிக்கையை ஆரம்பிப்பதன் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணி வீதம் பாதிக்கப்படாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இவ்விடயம் தொடர்பில் மத்திய வங்கி தெரிவிக்கையில்,
“இதற்கிடையில், ஒன்லைன் முறைகள் மூலம் முறையான திட்டங்களாக நடித்து முதலீட்டாளர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு பணத்தை திரும்பப் பெறுவது குறித்து பல பொது முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.
இந்தத் திட்டத்தில் பங்குபற்றுபவர்களுக்குத் தங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவதற்காக மத்திய வங்கிக்கு வருமான வரி செலுத்த வேண்டும்.
அவ்வாறு செய்யாவிட்டால், பணத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் தெரிவித்து இந்த மோசடிச் செயல் மேற்கொள்ளப்படுகிறது.
இலங்கை மத்திய வங்கி அவ்வாறான வரியை தமது நிறுவனம் வசூலிப்பதில்லை” என குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இவ்வாறான திட்டங்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு மத்திய வங்கி மக்களைக் கோருகின்றது.