பச்சை குத்தியவர்களிடம் இருந்து தானத்திற்காக இரத்தம் எடுக்கப்பட மாட்டாது என தேசிய இரத்த மாற்று சேவையின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்குக் காரணம் பச்சை குத்துவதன் மூலம் சமூக நோய்கள் பரவும் போக்கு அதிகரித்து வருவதாலும், இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான பச்சை குத்தும் மையங்கள் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார பரிந்துரைகளைப் பின்பற்றாததாலும், ஆபத்து மேலும் தீவிரமடைந்துள்ளது என தேசிய இரத்த மாற்று சேவையின் பணிப்பாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.
நிலைமையை மேலும் விளக்கிய வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க, ஒரு இரத்த தானம் செய்பவரின் இரத்தமானது, நான்கு பேரின் இரத்த தேவைகளுக்காக பயன்படுத்துவதாகவும், இதானால் தேவையற்ற அவதானத்தினை எடுக்க வேண்டாம் என தேசிய இரத்தமாற்ற சேவை தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
அதன்படி, பச்சை குத்துதல், தோல் குத்துதல் போன்ற செயல்களைச் செய்தவர்கள், அது தொடர்பான பணிகளைச் செய்து ஒரு வருடத்திற்கு இரத்த தானம் செய்பவர்களாகத் தொடர்பு கொள்ளப்பட மாட்டார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.