கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் பேசுவதை தடுக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்று வரும் மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாடு முழுவதிலும் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் கிரிக்கெட் அரசியல்வாதிகளால் கட்டுப்படுத்தப்படுவதாகக் கூறிய அவர், அந்த மக்களுக்கு கிரிக்கெட் நிறுவனம் மூலம் ஊதியம் வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்திருந்தார்.