follow the truth

follow the truth

November, 19, 2024
HomeTOP1ரயில் பயணிகளுக்கான விசேட அறிவித்தல்

ரயில் பயணிகளுக்கான விசேட அறிவித்தல்

Published on

பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இன்று (24) ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று (23) பிற்பகல், புகையிரத கட்டுப்பாட்டாளரை தாக்கிய சம்பவம் தொடர்பில் புகையிரத மின்சார உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மின்சார ஊழியர்கள் குழுவொன்று அவசர தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

இதன் காரணமாக நேற்றிரவு அனைத்து புகையிரத பாதைகளிலும் புகையிரத தாமதம் ஏற்பட்டதாகவும், அங்கு பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் ரயில்வே அதிகாரிகள் தலையிட்டு ரயில் சேவையினை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்ததையடுத்து ரயில் மீண்டும் இயக்கப்பட்டது.

இதேவேளை, இன்றைய தினம் சிறந்த முறையில் ரயில்களை இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ரயில்வே பொது மேலாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ். குணசிங்க ரயில் தாமதங்களைத் தவிர்த்து அனைத்து ரயில்களையும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதேவேளை, நிறுவனத்தின் நடைமுறைகளை பின்பற்றாத ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“நாட்டின் முன்னேற்றம் தான் முக்கியம் – தனிநபர்களின் லேபல்கள் அல்ல..”

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சரியான நபர்களை சரியான அமைச்சுகளுக்கு நியமித்துள்ளார் என்பதில் தனக்கு முழு நம்பிக்கை உள்ளதாக...

தேசியப்பட்டியல் குறித்து சிலிண்டரின் நிலைப்பாடு நாளை அறிவிக்கப்படும்

புதிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றிற்கு ரவி கருணாநாயக்கவின் பெயரை...

ரணிலை பாராட்டிய சர்வதேச நாணய நிதியின் பிரதிநிதிகள்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இன்று மலர்...